காலி குடங்களுடன் சாலை மறியல்

ஆம்பூர் அருகே காலி குடங்களுடன் சாலை மறியல் நடைபெற்றது.

Update: 2023-07-31 19:34 GMT

ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தெருக் குழாய்களில் சரிவர குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என்றும், இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்பகுதிமக்கள் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலறிந்ததும் உமராபாத் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்