டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்

கோட்டூரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-01-06 18:45 GMT

கோட்டூர்:

கோட்டூரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடை திறப்பு

கோட்டூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை கட்டிடம் கட்டப்பட்டது. அப்போது இதுகுறித்து அறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் கடை திறக்கவில்லை. இந்த நிலையில் முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளர் ஸ்ரீதரன் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உங்களுடைய கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவியுங்கள் என உதவி மேலாளர் ஸ்ரீதரன் கூறினார். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கழனியப்பன் (திருத்துறைப்பூண்டி), சிவக்குமார் (கோட்டூர்), சப்-இன்ஸ்பெக்டர்கள் சிங்கார வடிவேலு,பார்த்திபன்,ரவிச்சந்திரன், மேகநாதன்மற்றும் ஆயுதப்படை போலீசார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்இந்த சாலை மறியல் போராட்டத்தினால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்