சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்

மணப்பாறை அருகே சீரான முறையில் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் நடைபெற்றது.

Update: 2023-05-31 19:54 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் ஒரு பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், மற்றொரு பகுதியில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மணப்பாறை - குளித்தலை சாலையில் படுகளம் பிரிவு பகுதியில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்