லாரிகளுக்கு தனி சாலை அமைக்க வலியுறுத்தி மறியல்

லாரிகளுக்கு தனி சாலை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.

Update: 2022-10-17 20:56 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் அருகே நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி ராஜாங்கம் உயிரிழந்தார். இதை கண்டித்தும், லாரிகளுக்கென தனிச் சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் காட்டுப்பிரிங்கியம் கிராம மக்கள் 2-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு லாரிகள் செல்வதற்கான தனி பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நிறுவன சாலை வளாகத்திலும் மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்