டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பரமக்குடியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-15 18:45 GMT

பரமக்குடி, 

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது உற்பத்தி ஆலைகளையும் மூட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடியில் தாய் தமிழர் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கட்சி தலைவர் பி.எம். பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய கூட்டமைப்பின் நிறுவனர் ராசா கிருட்டிணன், தமிழக முன்னேற்ற கழகம் தலைவர் ராஜ்குமார் தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி தாய்நாடு மக்கள் கட்சி பூமி ராஜன், பொதுச்செயலாளர் செல்வம், தலைமை நிலைய செயலாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர் திருப்பதி, சிவகங்கை மாவட்ட செயலாளர் மலைச்சாமி, ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 41 பேரை பரமக்குடி நகர் போலீசார் கைது செய்தனர். பின்பு மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்