விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

மேல்செங்கப்பாடியில் அம்பேத்கர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-21 18:48 GMT

அரூர்:

அரூர் அடுத்த மேல்செங்கப்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 6 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா மற்றும் கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை அகற்றுமாறு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரூர்- திருவண்ணாமலை சாலையில் மேல்செங்கப்பாடி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் முறையான அனுமதி பெற்று சிலையை வைத்து கொள்ளலாம் என கூறினார். இதனையடுத்து சிலை அகற்றப்பட்டு மேல்செங்கப்பாடி சமுதாய கூடத்தில் வைக்கப்பட்டது. அம்பேத்கர் சிலை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரூர், கச்சேரிமேடு, எஸ்.பட்டி ஆகிய இடங்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்