ஆண்டிப்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியல்

ஆண்டிப்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-14 16:03 GMT

ஆண்டிப்பட்டி காமராஜ்நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக தனிநபர் வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர் சுரேஷ்பாண்டி தலைமையில் தேனி-மதுரை சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது கோரிக்கை குறித்து புகார் மனு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மறியல் காரணமாக ஆண்டிப்பட்டியில், தேனி-மதுரை சாலையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்