நிதி நிறுவன பெண் ஊழியர் பலி

தஞ்சையில் ஸ்கூட்டர் மீது தனியார் பஸ் மோதியதில் நிதி நிறுவன பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார். பஸ் இருசக்கர வாகனத்தை இழுத்துச்சென்ற போது முன்னால் சென்ற கார் மீதும் மோதியது.

Update: 2022-06-20 20:50 GMT


தஞ்சையில் ஸ்கூட்டர் மீது தனியார் பஸ் மோதியதில் நிதி நிறுவன பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார். பஸ் இருசக்கர வாகனத்தை இழுத்துச்சென்ற போது முன்னால் சென்ற கார் மீதும் மோதியது.

தனியார் நிதி நிறுவன ஊழியர்

தஞ்சையை அடுத்த களிமேடு பகுதியை சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி (வயது 31). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அகிலாண்டேஸ்வரி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது ஸ்கூட்டரில் புறப்பட்டார்.தஞ்சை கொண்டிராஜபாளையம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பாபநாசம் நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென அகிலாண்டேஸ்வரி மீது மோதியது.

தலைநசுங்கி சாவு

இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோதிய வேகத்தில் பஸ் இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் இழுத்துக்கொண்டு முன்னால் சென்ற கார் மீதும் மோதியது. இதில் காரும் சேதம் அடைந்தது.இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த அகிலாண்டேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்