மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார். மகன் கண் முன்பு நடந்த இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

Update: 2022-12-19 20:12 GMT

    வல்லம்;

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார். மகன் கண் முன்பு நடந்த இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்தனர்

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சுவாதி(வயது 40). இவர்களுடைய மகன் கார்த்தி(22). நேற்று முன்தினம் சுவாதி தனது மகன் கார்த்தியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து தஞ்சைக்கு மகனுடன் மேட்டார் சைக்கிளில் வந்தார்.தஞ்சை-திருச்சி சாலை முன்னையம்பட்டி பிரிவு சாலை அருகே மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது சுவாதியின் சகோதரி மற்றொரு மோட்டார் சைக்கிளில் சுவாதி வருவதை எதிர்பார்த்துக்கொண்டு சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

கீழே விழுந்தார்

அப்போது கார்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுவாதியின் சகோதரியை கடந்து வேகமாக சென்றது. உடனே சாலையில் நின்று கொண்டிருந்த சகோதரியை பார்த்து சுவாதி கை அசைத்துள்ளார். இதனால் கார்த்தி மோட்டார் சைக்கிளை நிறுத்த பிரேக் போட்டுள்ளார்.அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தாய்-மகன் இருவரும் தவறி சாலையில் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த சுவாதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுவாதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மகன் கண் முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து தாய் கீழே விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்