வேன்-கார் மோதல்; பள்ளி தாளாளர் பலி

சேதுபாவாசத்திரம் அருகே வேன் மீது கார் மோதியதில் பள்ளி தாளாளர் உயிாிழந்தார். 2 ஆசிரியைகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-10-29 21:04 GMT

சேதுபாவாசத்திரம்;

சேதுபாவாசத்திரம் அருகே வேன் மீது கார் மோதியதில் பள்ளி தாளாளர் உயிாிழந்தார். 2 ஆசிரியைகள் படுகாயம் அடைந்தனர்.

தனியார் பள்ளி தாளாளர்

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாசிபட்டினம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருந்து சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோராவை சுற்றிபார்க்க 6 பள்ளி மாணவ, மாணவிகளுடன் பள்ளி தாளாளர் செய்யது முகமது(35) மற்றும் ஆசிரியைகள் கார்த்திகா, சத்தியா ஆகியோர் ஒரு வேனில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தனர். வேனை பள்ளி தாளாளர் செய்யது முகமது ஓட்டினார். மதியம் 2 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வலது புறமாக மனோராவிற்கு திரும்பும்போது எதிரே மல்லிப்பட்டினத்தில் இருந்து மணமேல்குடிக்கு சென்றுகொண்டிருந்த கார் நிலைதடுமாறி வேன் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் வேனை ஓட்டி வந்த பள்ளி தாளாளர் செய்யது முகமது, ஆசிரியைகள் கார்த்திகா, சந்தியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பள்ளி தாளாளர் செய்யது முகமது உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆசிரியைகள் கார்த்திகா, சத்தியா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளி மாணவ- மாணவிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி தப்பினர்.இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்