மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு

மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்துதவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்தார்.

Update: 2023-06-23 19:15 GMT

மணல்மேடு;

மணல்மேடு அருகே உள்ள கடலங்குடியை சேர்ந்தவர் பிச்சை மகன் மணிகண்டன் (வயது 37). கொத்தனார். சம்பவத்தன்று மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மணல்மேடு அருகே உள்ள கிழாய் காளியம்மன் கோவில் எதிரே சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் அவர் நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணிகண்டன் மனைவி பரிமளா (37) மணல்மேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் அந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்