படுகாயமடைந்தவர் சாவு

கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்தார்.

Update: 2023-02-04 20:08 GMT

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே உள்ள சோமேஸ்வரபுரம் மெயின் ரோட்டில் வசிப்பவர்கள் மகாலிங்கம் (வயது60), ரவீந்திர குமார்(50). திருச்சேற்றுத்துறை நடுத்தெருவில் வசிப்பவர் ரமேஷ் ( 49). இவர்கள் 3 பேரும் கூலி வேலைக்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். ஆடுதுறை பெருமாள் கோவில் பஸ் நிலையம் அருகில் இவர்கள் வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் உயிரிழந்தார். ரமேஷ், ரவீந்திரகுமார் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்