மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி
திருமக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார். வாலிபர் படுகாயமடைந்தார்.
திருமக்கோட்டை;
திருமக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார். வாலிபர் படுகாயமடைந்தார்.
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்
திருவாரூா் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூர் கணபதி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் பார்த்திபன் (வயது28). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். அதே தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் மகன் சரவணன்(22). சம்பவத்தன்று மாலை பார்த்திபன், சரவணன் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமக்கோட்டைக்கு வந்து மளிகை பொருட்கள் வாங்கினர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பும் போது வல்லூர் பாலம் அருகே எதிரே வந்த சுற்றுலா வேன் பார்த்திபன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிகிச்சை
சரவணன் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேன் டிைரவர் உலயகுன்னம் பகுதியை சேர்ந்த அன்பு(45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.