சாலை விரிவாக்க பணி மும்முரம்

Update: 2023-05-21 15:56 GMT


திருப்பூா் தெற்கு போலீஸ் நிலையத்தில் இருந்து காங்கயம் செல்லும் கிராஸ் ரோட்டில் சாலை விரிவாக்க பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த சாலை திருப்பூர் பழைய பஸ் நிலையம், பல்லடம் சாலை ஆகியவற்றை காங்கயம் சாலையுடன் இணைக்கும் முக்கிய சாலையாகும். இதனால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். மிகவும் குறுகலான இந்த சாலையில் வணிக நிறுவனங்களும், உணவு கடைகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் அரசு இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது விரிவாக்கம் செய்யப்படும் இடங்களில் உள்ள வீடுகள், கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் திருப்பூர் மாநகரில் உள்ள குறுகிய சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்