சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2022-12-27 16:18 GMT

திருப்பூர், டிச.28-

திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பிரதான சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். நேற்று யூனியன் மில் ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். ஸ்ரீசக்தி தியேட்டர் முன்புறம் இருந்து தொடங்கி, ஊத்துக்குளி ரோடு சந்திப்பு வரை சாலையின் இருபுறமும் கடைகளுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த பெயர்ப்பலகை, தற்காலிக பந்தல், விளம்பர தட்டிகள் ஆகியவற்றை பொக்லீன் எந்திரம் மூலம் அகற்றி லாரியில் ஏற்றினார்கள்.

பல கடைக்காரர்கள் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். திருப்பூர் வடக்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்