சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2023-07-19 17:21 GMT


திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபாளையம் சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை அந்த பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தன. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அந்தந்த நிறுவனங்களே தாமாக முன்வந்து அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று அம்மாபாளையம்-ராக்கியாபாளையம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினார்கள். இதையொட்டி திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்