ஆர்.கே.எஸ். கல்லூரியில் முப்பெரும் விழா

இந்திலி ஆர்.கே.எஸ். கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2022-06-09 18:43 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர்ஆர்.கே.எஸ். கல்லூரியில் விளையாட்டு விழா, விருது வழங்கும் விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு டாக்டர்ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர் குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நடிகர் பப்லு பிரித்திவிராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆண்டு மலரினை வெளியிட்டார்.

பின்னர் விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜூ விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். இதையடுத்து வாழும் தொல்காப்பியர், தமிழக அரசின் பாவேந்தர் கபிலர் விருதாளர் புலவர் வெற்றியழகன் விருது வழங்க, அதனை தேசிய மாநில விருதாளர் குறிஞ்சி ஞானவைத்தியநாதன் பெற்றுக்கொண்டார். தமிழறிஞர் கார்டுவெல் விருதை, முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் மதிவாணன் பெற்றார். தொடர்ந்து விளையாட்டு விழாவின் ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர்கள் விக்னேஷ், பாலாஜி ஆகியோர் வாசித்தனர்.

பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர் மீது தொடர் கவனம் செலுத்தும் பெற்றோருக்கு பெருமை மிகு பெற்றோர் விருதும், சாதனை படைத்த மாணவர்களுக்கு டாக்டர் ஆர்.கே.எஸ்.சாதனை மாணவர் விருதும் என 7-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரியின் செயலாளர் கோவிந்தராஜூ, பொருளாளர் தமிழ்மணி, துணை முதல்வர் ஜான்விக்டர் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறை தலைவர் பிரவீனா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்