மயிலாடுதுறை மாவட்டத்துக்கு காவிரி நீர் வந்தது

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு காவிரி நீர் வந்தது

Update: 2023-06-20 19:15 GMT

குத்தாலம்;

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூரில் இருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம் இந்த ஆண்டும் தமிழக முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஜூன் 12-ந் தேதி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிலையில் காவிரி நீர் நேற்று முன்தினம் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கிக்கு வந்தடைந்தது. நேற்று காலை குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் .மகாபாரதி மலர் மற்றும் நவதானியங்களை தூவி காவிரி நீரை வரவேற்றார். நிகழ்ச்சில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், குத்தாலம் தாசில்தார் இந்துமதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்