தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம்

சிவகிரி அரசு ஆஸ்பத்திரி முன் தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Update: 2022-12-01 18:45 GMT

சிவகிரி:

தென்காசி மாவட்டம் சிவகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் அரசு ஆஸ்பத்திரியின் முன்பு மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் நுழைவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றிலும் புதர் செடிகள் அதிக அளவில் படர்ந்து கிடப்பதால் விஷ பூச்சிகள் ஆஸ்பத்திரிக்குள் நுழைவதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.

எனவே ஆஸ்பத்திரி வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் தேங்கி கிடக்கும் அசுத்தமான மழைநீர் மற்றும் படர்ந்து கிடக்கும் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் உட்காருவதற்கு இருக்கைகள் அமைத்துத் தர வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்