கலவரம் எதிரொலி: நெய்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

கடலூரில் இருந்து நெய்வேலி மார்க்கத்தில் செல்லும் தொலைதூர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-07-28 10:08 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக 400 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வன்முறை எதிரொலியாக, கடலூரில் இருந்து நெய்வேலி மார்க்கத்தில் செல்லும் தொலைதூர அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டு உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்