கோட்டையை நோக்கி உரிமை மீட்பு போராட்டம்

ரூ.30 ஆயிரம் மாத ஊதியம் கேட்டு கோட்டையை நோக்கி உரிமை மீட்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கூறினார்.

Update: 2023-07-28 19:00 GMT
கிணத்துக்கடவு


ரூ.30 ஆயிரம் மாத ஊதியம் கேட்டு கோட்டையை நோக்கி உரிமை மீட்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கூறினார்.


ஆலோசனை கூட்டம்


கோவை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம் கிணத்துக்கடவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இதற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் திருநாவுக்கரசு என்ற பிரபு தலைமை தாங்கினார். கவுரவ தலை வர் காரச்சேரி. கே.எம்.எஸ்.சுந்தர்ராஜ், துணைத் தலைவர் முருகவேல், செயலாளர் ஆனந்திசண்முகம், பொருளாளர் சின்னு என்ற சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலா ளர் கோதவாடி கே.ஆர்.ரத்தினசாமி வரவேற்றார்.


அதிகாரம் பறிப்பு


இதில், மாநில தலைவர் எஸ்.எம்.முனியாண்டி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அரசு அதிகாரிகளும் பறித்து விட்டனர். ஊராட்சிக்கு வழங்க வேண்டிய ஈம கிரியை மானியம், வீட்டு வரி ஈட்டு மானியம், முத்திரைத்தாள் கட்டணம் ஆகிய அனைத்தையும் அரசு நிறுத்தி விட்டது. இதனால் ஒவ்வொரு ஊராட்சி மன்றமும் நிதியும், அதிகாரமும் இல்லாமல் தத்தளித்து வருகிறது.


மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் களுக்கு மாதம் மதிப்பூதியம் வழங்குவதற்கு அரசு ஆணையிட்ட தை ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வரவேற்கிறது. 20 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாத ஊதியம் கேட்டு போராடி வருகிறோம். எனவே ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ரூ.30 ஆயிரம் மாத ஊதியம்,ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.


உரிமை மீட்பு போராட்டம்


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட் டத்தில் 2 முறை ஆர்ப்பாட்டம் நடத்தியும் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி ஒருங்கிணைந்த தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் கோட்டையை நோக்கி உரிமை மீட்பு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணிராஜன், கோவை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்