கஸ்தூரிகோம்பை வனப்பகுதியில் கோவில் அருகே பதுக்கப்பட்ட நாட்டுத்துப்பாக்கிகள்-போலீசார் பறிமுதல் செய்து விசாரணை

Update: 2022-10-07 18:45 GMT

நல்லம்பள்ளி:

தொப்பூரை அடுத்த கம்மம்பட்டி அருகே கஸ்தூரிகோம்பை வனப்பகுதியில் அனுமன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே முட்புதரில் 4 நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து தொப்பூர் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கோவில் அருகே நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்த மர்மநபர்கள் யார்?, எதற்காக பதுக்கி வைத்தனர்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்