முட்புதரில் கிடந்த நாட்டுத்துப்பாக்கி மீட்பு
கோவிலூர் ஏரியில் முட்புதரில் கிடந்த நாட்டுத்துப்பாக்கி மீட்கப்பட்டது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கோவிலூர் ஏரியில் முட்புதரில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று கிடப்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முட்புதரில் கிடந்த நாட்டுத்துப்பாக்கியை மீட்டனர். இந்த துப்பாக்கியை ஏரியில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.