திருச்சி கல்லுக்குழியில் உள்ள ரெயில்வே மைதானத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ரிக்ஷா பந்தயம் நடைபெற்றது. ரிக்ஷா ஓட்டுனர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தனித்தனியாக நடைபெற்ற இந்த போட்டியில் ரிக்ஷா வாலா பிரிவில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பெரியசாமி 2 நிமிடம் 13 வினாடிகளில் ஓட்டி வெற்றி பெற்றார். கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் இந்திரா கணேசன் கல்லூரி மாணவர் அப்துல் பங்கேற்று 2 நிமிடம் 31 வினாடிகளில் ரிக்ஷாவை ஓட்டி வெற்றி பெற்றார்.