புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் புரட்சிகர இளைஞர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை டவுனில் புரட்சிகர இளைஞர் கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் பேச்சிராஜா தலைமை தாங்கினார். மாநில தலைவர் சுந்தர்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ரமேஷ், சங்கரபாண்டியன், பேச்சிமுத்து, சிவா, மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.