புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்
10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என வலியுறுத்தி வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஸ் நிலையம் அருகில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிரதாபன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் உயர் சாதி வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.