ஸ்ரீமுஷ்ணத்தில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீமுஷ்ணத்தில் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-12-30 19:00 GMT

ஸ்ரீமுஷ்ணம், 

தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்ரீமுஷ்ணம் பழைய போலீஸ் நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார். இன்னாசி, பஞ்சநாதன், அய்யம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிற்சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பட்டுசாமி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சசிகுமார், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், சகாயராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக்கி, சம்பளத்தை ரூ.500 ஆக உயர்த்த வேண்டும், பேரூராட்சி பகுதிக்கும் விவசாயத்துக்கும் 100 நாள் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், அனைத்து கிராம மக்களுக்கும் வீட்டுமனை வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும், கள்ளிப்பாடி காவனூர் இடையே வெள்ளாற்றில் உடனடியாக மேம்பாலம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்