கிராம சாலைகள் மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
கிராம சாலைகள் மேம்பாட்டு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் பணிகள் முன்னேற்றம் குறித்து ஒப்பந்ததாரர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் (2022-23) முதல் கட்டமாக 75 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 112 சாலைகள் 202.622 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.69.49 கோடி மதிப்பீட்டில் ஊரக சாலைகள் வலுப்படுத்துதல், புதுப்பித்தல் மற்றும் தார்சாலையாக மேம்பாடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் பெயரிலேயே திட்டம் உள்ளதால் இப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் இத்திட்டத்தின்கீழ் நடைபெறும் அனைத்து பணிகளையும் உரிய தரத்துடன் குறிப்பிட்ட காலத்திற்குள் வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் முடித்திட வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் அறுவுறுத்தினார்.