வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திரும்பபெறவேண்டும்

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திரும்பபெறவ வலியுறுத்தி கலெக்டரிடம் த.மா.கா.வினர் மனு அளித்தனர்

Update: 2023-06-12 18:45 GMT

தமிழக அரசு வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை தற்போது கடுமையாக உயர்த்தி உள்ளது. இது வணிகர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெறுவதாக கட்சி தலைமை அறிவித்திருந்தது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், வர்த்தக பிரிவினர் மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், கொரோனா காலகட்டம் முடிந்து தற்போது மீண்டும் தொழில்கள் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை காரணமாக தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு நசியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது நிர்வாகிகள் கார்த்திகேயன், ராயல் சங்கர், சார்லஸ், முட்டம் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்