வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு

வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு நடைபெற்றது.

Update: 2022-07-24 19:17 GMT

பொன்னமராவதி:

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு பொன்னமராவதியில் நடைபெற்றது. இதற்கு பொன்னமராவதி வட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் சுப்பையா, மாவட்ட செயலாளர் செல்லையா, மாவட்ட பொருளாளர் பழனிவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மாநாட்டில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதனை 30 சதவீதமாக வழங்க வேண்டும். கிராம உதவியாளர் பணியினை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பொன்னமராவதி வட்ட கிளைக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்