வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்;
திருச்சி உள்வட்ட வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த், மாநில பொருளாளர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டம், துறையூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளரை மணல் கொள்ளை தடுப்பின்போது தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.