வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-21 20:09 GMT

ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட சில்லத்தூர் சரக வருவாய் ஆய்வாளராக சதீஷ்குமார் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் அம்மங்குடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பட்டுவிடுதி கிராமத்திற்கு சென்றபோது, அங்கு சிலர் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சதீஷ்குமார் திருவோணம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமாரை தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மதியம் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்