வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-30 19:47 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனித்தாசில்தார் மனோஜ் முனியனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் தலையீட்டினை கண்டித்தும், பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, செயலாளர் பழனிசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வருவாய் துறையினர் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் சரிபார்ப்பு உள்பட பல்வேறு வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பணிகள் நேற்று பாதிக்கப்பட்டன. இதேபோல் முசிறி வருவாய் துறை அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் முசிறி வட்ட கிளை சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்