நெல்லை:
தமிழகம் முழுவதும் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், திருச்சியில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க (ஆவின்) பொது மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, நெல்லை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதேபோல் நெல்லை முத்திரைத்தாள் தனி துணை ஆட்சியர் மாரிமுத்து, தூத்துக்குடி இஸ்ரோ நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.