லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை

வண்டல் மண் எடுக்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-02-25 10:48 GMT

வண்டல் மண் எடுக்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு உத்தரவிட்டது.

வந்தவாசி தாலுகா தேசூர் அடுத்த சீயமங்கலத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது விவசாய நிலத்தின் தேவைக்காக அதே பகுதியில் உள்ள ஏரியில் இருந்து கட்டணமின்றி வண்டல் மண் எடுக்க வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.

அந்த சமயத்தில் பணியில் இருந்த தேசூர் வருவாய் ஆய்வாளர் கோபிநாத், வண்டல் மண் எடுக்க தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து சிவக்குமார் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் லஞ்சம் வாங்கிய போது சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கை நீதிபதி ஈஸ்வரமூர்த்தி விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் கோபிநாத்திற்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்