பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கபிஸ்தலம் சரகத்திற்கு 16-ந்தேதி நடக்கிறது

Update: 2023-05-13 20:21 GMT

பாபநாசம்;

பாபநாசம் தாசில்தார் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் கபிஸ்தலம் சரகத்திற்கு ஜமாபந்தி வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடக்கிறது. இதில் கோவிந்த நாட்டுச்சேரி, உம்பளப்பாடி, கபிஸ்தலம், சருகை, உமையாள்புரம், கருப்பூர் படுகை, மேலகபிஸ்தலம், ராமானுஜபுரம், சத்தியமங்கலம், திருவைக்காவூர், கொந்தகை, நடுபடுகை, ஓலைப்பாடி, மருத்துவக்குடி, துரும்பூர், திருமண்டங்குடி, கூனஞ்சேரி, தியாகசமுத்திரம், அலவந்திபுரம், ஆதனுர், நரசிம்மபுரம், ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை முதல்வரின் முகவரி என்னும் இணையதளத்தில் இணைய வழியாகவும் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவும் மற்றும் நேரடியாகவும் அளிக்கலாம். முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பிறப்பு இறப்பு சான்று, பட்டா மாறுதல், சாதி, வருமானம், இருப்பிடம் சான்று, குடும்ப அட்டையில் திருத்தம் செய்தல் ஆகிய கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக கொடுத்துபயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்