சென்னை ஆவடி சிறப்பு காவல் படை கமாண்டராகபதவி ஏற்ற நாளில் பணி ஓய்வு பெற்ற சேலம் போலீஸ் அதிகாரி

Update: 2023-07-31 20:06 GMT

சேலம்

சேலம் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் செல்லபாண்டியன் (வயது 58). இவருக்கு நேற்று முன்தினம் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டராக நியமிக்கப்பட்டார். பின்னர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர் உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, அவருக்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று காலை ஆவடி சிறப்பு காவல்படை கமாண்டராக செல்லபாண்டியன் பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, அவருக்கு உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சிறிது நேரம் அலுவலக பணியை கவனித்த அவர் மாலையில் பணி ஓய்வு பெற்றுவிட்டார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்ற அதேநாளில் செல்லபாண்டியன் பணி ஓய்வு பெற்றிருப்பது சக போலீஸ் அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்