ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Update: 2022-06-17 18:27 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட கருவூலம் மூலம் 4,192 ஓய்வூதியர்களும், சார்நிலை கருவூலங்களான அரவக்குறிச்சியில் 703 ஓய்வூதியர்களும், கரூரில் 312 ஓய்வூதியர்களும், குளித்தலையில் 1,827 ஓய்வூதியர்களும், கிருஷ்ணராயபுரத்தில் 253 ஓய்வூதியர்களும், கடவூரில் 222 ஓய்வூதியர்களும் என 7,509 ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களின் ஓய்வூதிய பலன்கள், நிலுவை தொகைகள், ஊதிய முரண்பாட்டால் ஏற்பட்ட ஓய்வூதிய முரண்பாடுகள் கலைதல், மருத்துவ காப்பிட்டு உதவித்தொகை நிலுவை உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் என 25 மனுக்கள் வரப்பெற்றன.

பெறப்பட்ட 25 மனுக்கள் நேற்று ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு மனுதாரர் மற்றும் பதில் அளிக்கும் அலுவலர் என இருவர் முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி உடனடியாக 3 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வூதியர்களிடமிருந்து 15 புதிய கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்து அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்