ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட 4 பேர் கைது
பொதுமக்களிடம் அதிக வட்டி வசூல் செய்ததாக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவிடைமருதூர்;
பொதுமக்களிடம் அதிக வட்டி வசூல் செய்ததாக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிக வட்டி வசூல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியில் பொதுமக்களிடம் சிலர் அதிக வட்டி வசூல் செய்வதாக போலீசாருக்கு புகார் தொிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் நாச்சியார்கோவில் பகுதியில் தீவிர விசாரணை நடத்தி 4 பேரை பிடித்தனர்.
4 பேர் கைது
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த ராஜா(வயது 61), பிரபாகரன்(49), ராஜலட்சுமி(37), துக்காச்சி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் நவநீதம்(73) என்பதும், அவர்கள் அதிக வட்டி வசூல் செய்ததும் தொிய வந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்து கும்பகோணம் ேகார்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.