6-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்: ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் போக்சோவில் கைது

6-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-12 22:58 GMT

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி மானத்தால் ஓலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 62), ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர். இவர் 6-ம் வகுப்பு மாணவியிடம் 100 ரூபாயை கையில் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அர்ஜூனன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்