ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூடலூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நல சங்கம் சார்பில் கூடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் சாமுலேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சிவராஜ் தொடங்கி வைத்தார். வட்ட செயலாளர் அமீது கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் வர்கீஸ், வட்ட செயலாளர் விஸ்ணுதாசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் போஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.