வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்
விருதுநகரில் வீட்டில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் குமாரவேல் (வயது 75). ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவருக்கு 4 மகள்கள் உள்ள நிலையில் 2-வது மனைவி சுப்புலட்சுமி மூலம் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் சத்திரரெட்டியபட்டி ஹவுசிங் போர்டு காலனியில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி இவரது மகள் சீனிசெல்வி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.