மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை பலி

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை பலியானார்.

Update: 2023-06-22 19:23 GMT

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் காமாட்சிநகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி பொன் விக்டோரியா (வயது 65). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை.

சம்பவத்தன்று கணவன்-மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தை கடந்து கொங்கராயக்குறிச்சிக்கு சென்றுகொண்டிருந்தனர். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கண் இமைக்கும் நேரத்தில் பால்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் பொன் விக்டோரியா பலத்த காயம் அடைந்தார். பால்ராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பொன் விக்டோரியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்