ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க கூட்டம் நடந்தது.

Update: 2022-07-08 10:34 GMT

தூத்துக்குடி மாவட்ட ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாம்பசிவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வட்ட கிளை செயலாளர் சம்பத் சாமுவேல் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் முத்தையா கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் மாநில பொதுக்குழு முடிவுகளை விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில இணை செயலாளர் லீலாவதி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் புதிய பொருளாளராக கண்ணையா தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் வருகிற 12-ந் தேதி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, 17-ந் தேதி தூத்துக்குடியிலும், 19-ந் தேதி ஸ்ரீவைகுண்டத்திலும், 26-ந் தேதி திருச்செந்தூரிலும் வட்டக்கிளை மாநாடு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கோவில்பட்டி சிந்தாமதர் பக்கீர், ஓட்டப்பிடாரம் ரகுநாதன், திருச்செந்தூர் ஊமைத்துரை சாமுவேல், ராஜபாண்டி, பாஸ்கரன், தூத்துக்குடி ராஜாராம், ஞானசேகர், ஸ்ரீவைகுண்டம் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்