ஓய்வு பெற்ற மின்வாரிய தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

ஓய்வு பெற்ற மின்வாரிய தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-25 19:28 GMT

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சுடலை, தமிழ்நாடு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் பொதுச்செயலாளர் சேக்கிழார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிரந்தர தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும் அதே நேரத்திலேயே ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதில் மனைவி பெயர் மற்றும் ெசல்போன் எண் குறிப்பிடாமல் தருவதை சரி செய்து, புதிய அட்டை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான குறைகளை நிர்வாகத்தோடு பேசி தீர்ப்பதற்கு ஓய்வூதிய சங்கத்தை அழைத்து பேசுவது போல் தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்கத்தையும் அழைத்து பேச வேண்டும். மின்சார வாரியத்தில் ஓய்வூதியர் சங்கங்களுக்கு உத்தரவின் நகல் வழங்குவதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் உள்ள பட்டியலில் சங்கத்தை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் செல்வராஜ், சக்திவேல், ஜோசப் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சிவசுப்புபாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்