விருத்தாசலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-02 18:45 GMT

விருத்தாசலம், 

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். செயலாளர் தீனபந்து வரவேற்றார். மாநில முன்னாள் தலைவர் கலாமணி, தலைமை நிலைய பேச்சாளர் ராமன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் நெடுமாறன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் காசிலிங்கம், ராஜமாணிக்கம், சுப்பிரமணியன், மலர்விழி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆதி திராவிட நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பண பலன்களை வழங்க மறுக்கும் விருத்தாசலம் தனி தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து அவரால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்