ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் தற்கொலை
ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் தற்கொலை
அம்மாப்பேட்டை
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே சாலியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது67). இவர் ஓய்வுபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து ெவங்கடாஜலபதி சம்பவத்தன்று வீட்டில் மதுவில் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது உறவினர்கள் வெங்கடாஜலபதியை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கடாஜலபதியின் மகன் அருள் கணபதி (31) கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.