ஓய்வு பெற்ற கண்டக்டர் சாவு

ஓய்வு பெற்ற கண்டக்டர் சாவு

Update: 2023-04-23 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் எஸ்.பொன்னாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 61). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் தனது மொபட்டில் கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த மொபட், சாலையின் நடுவில் இருந்த டிவைடரில் மோதியது. இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜ் உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் கோவிந்தராஜை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்