ஓய்வுபெற்ற கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
பொன்னமராவதியில் ஓய்வுபெற்ற கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னமராவதி பூக்குடி வீதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 64). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 2 மனைவிகளும், 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தில் சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் தங்கமணி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் தங்கமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.