ஓய்வு பெற்ற அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம்
ஓய்வு பெற்ற அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கையில் சில்வர் தட்டை ஏந்தியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க ஒன்றிய தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சரோஜா, அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட செயலாளர் ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். அப்போது தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.